| TEMPLE PROFILE - கோவில் வரலாறு
|
| மாத்தூர் கோவில் நகரத்தார்களுக்குச் சொந்தமானது. நமது சமூகத்தாருக்கு ஒன்பது
கோவிலாக அமைத்து வாழ்ந்து வருகிறோம். நமது மாத்தூர் கோவிலில் ஒன்பது கோவிலில் ஒன்று
தற்சமயம் 8500க்கும் அதிகமான புள்ளிகளைக் கொண்ட பெரிய கோவில். நமது கோவில் புள்ளிகள் செட்டிநாட்டில் 57
ஊர்களில், 1. உறையூர் 2. அரும்பாக்கூர் 3.மணலூர் 4. மண்ணூர் 5.கண்ணூர்
6.கருப்பூர் 7. குளத்தூர் ஆகிய 7 பிரிவுகளாக வசித்து வருகிறோம். |
 |
|
இந்த கோவில் கொங்கனசித்தருடன் தொடர்புடைய கோவில் 1200 ஆண்டுகள் தொன்மை உடைய
பழமையான கோவிலாகும்.
இந்த திருக்கோவில் 1850ம் ஆண்டு கட்டப்பட்ட கோவில் என்று சொல்கிறார்கள். இதற்கு
முன் இந்த கோவில் சிறிய கோவிலாக இருந்தது. நமது நகரத்தார் 1931ம் ஆண்டு வாகன
கொட்டகை அமைத்து இருக்கிறார்கள். நகரத்தார் அரண்மனை போன்று தங்கும் விடுதி
அமைத்து பின்பு கோவில் திருப்பணி தொடங்கி இருக்கிறார்கள்.
|
| |
|
 |
இக் கோவிலின் ராச கோபுரம் 5 நிலைகளை
உடையது. 20.50மீ உயரமுடையது.இக் கோவிலின் மேல் தளம்
சுமார் 33,000 சதுர அடி பரப்புடையது.சிம்ம பீடத்தின்
மேல் நந்தி (மாத்தூரில் மட்டும் இருப்பது) சிறப்பு அம்சமாகும்.
மேலும் இக்கோவில் திருச்சுற்றில் தென் திசையில் தல
விருட்சமான மகிழ மரத்தடியில் ஊர் மக்களின் பிரதான
தெய்வமாக விளங்கும் முனீஸ்வரர் பீடம் சிறப்பான வழிபாட்டிற்கு
ஏதுவாக உள்ளது.
இந்த கோவில் காரைக்குடி புகைவண்டி நிலையத்தில் இருந்து 7கிமீ தொலைவில் உள்ளது.
கோட்டையூரிலிருந்து 5கிமீ தொலைவில் உள்ளது.
|
|
| கும்பாபிஷேகம்:
இரண்டாவது கும்பாபிஷேகம் 02.02.1949, மூன்றாவது கும்பாபிஷேகம் 01.07.1974,
நான்காவது கும்பாபிஷேகம் 04.07.1988, 19.08.1988 அம்மன் கோவில் கும்பாபிஷேகம்,
ஐந்தாவது கும்பாபிஷேகம் 28.03.2002ல் நடைபெற்றது.
தேர்த் திருவிழா:
1. நமது மாத்தூர் கோவிலில் சுவாமி தேர், அம்மன் தேர் இரண்டும் செய்தும், 60
ஆண்டுகளாக திருவிழா
நடைபெறாமல் இருந்தது. இரண்டு வாகனங்களும் பழுது
பார்த்து 10 நாள் தேர்த் திருவிழா மாசி மாதத்தில் சீறும்
சிறப்புமாக நடைபெற்று
வருகிறது.
2. உற்சவத்திற்கு உபய தாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தங்களாது மேலான நன்கொடைகள்
வரவேற்கப்படுகிறது. கீழ்கண்ட முகவரிக்கு நன்கொடைகள் அனுப்பி ஐநூற்று ஈஸ்வரர்
பெரிய நாயகி அம்பாள் அருள் பெறுவீர்களாக!! |
 |
| கும்பாபிஷேகத்திற்குப் பிறகு மாத்தூர் கோவில் சீரும் சிறப்புமாக நடைபெற பல
கமிட்டிகள் அமைத்து இறைபணி செய்து வருகிறோம். குறிப்பாக, நன்கொடையாளர்களின்
உதவியுடன் 10 அக்ரகாரங்கள் கட்டி இருக்கிறோம். வேத பாடசாலை அமைத்து இருக்கிறோம்.
2002ல் திரு. வள்ளியப்ப செட்டியார் உற்சவ நிறுவனராக இருந்து கீழ்வரும் உற்சவங்களை
நன்கொடைகள் மூலம் சேர்த்து சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.
|


 |
| சதுர்த்தி |
12 |
| சங்கடஹர
சதுர்த்தி
|
12 |
| கார்த்திகை
முருகன் அபிஷேகம |
12 |
| ஆடி, தை
அம்பாள் அபிஷேகம |
8 |
| ஆடி, தை
முனீஸ்வரர் அபிஷேகம் |
8 |
| பௌர்ணமி
அம்பாள் அபிஷேகம்
|
12 |
| மாதம் தோறும்
அமாவசையன்று சங்காபிஷேகம
|
12 |
| மாதம் தோறும்
வைரவர் ஓமம் தேய்பிறை அஷ்டமி
|
12 |
| பிரதோஷம் |
25 |
| கார்த்திகை
சோமவாரம் சங்காபிஷேகம் |
4 |
| குரு
அபிஷேகம் |
52 |
| நால்வர்
குருபூஜை |
4 |
| தமிழ்
ஆங்கில சிறப்பு வருடப்பிறப்பு அபிஷேகம் |
2 |
| திருப்பள்ளியெழுச்சி |
30 |
| சிவராத்திரி |
4
காலம் |
| ஆருத்ரா தரிசனம் |
1 |
| ஆனி திருமஞ்சனம் |
1 |
| அன்னாபிஷேகம்
ஐப்பசி |
1 |
| மகர
நோன்பு உற்சவம் |
10 |
| திருவிளக்கு
பூஜை |
1 |
|
| சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.
|
|
|
இன்னும் சில உபயோதாரர்கள்
இல்லாமல் இருக்கிறது. உபயோகதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
60 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து மகர நோன்பு உற்சவம் 10
நாளும் உபயதாரர்கள் உதவியுடன் செய்து மகர நோன்பு அன்று
சாமி இழந்தரம் செய்து அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெற்று
வருகிறது. ஆக மொத்தம் 223 உற்சவங்கள் நடைபெறுகிறது. |
| ஆயுஷ் ஓமம், 59ம், 60, 70, 80 மணி விழாக்கள் திருமண வைபவங்கள் நமது விடுதியில்
நடைபெற்று வருகிறது.
( தங்களுடைய தேவைகளுக்கு விடுதிக்கு தொடர்பு கொள்ளவும் ) |